Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசெம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசெம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments