Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தொடர்ச்சியான அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதற்கு எமது சமூகம் முன்வரவேண்டும் - முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வரப்போவதும்மில்லை.ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் முடியாது.வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கே வாக்களிக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக்கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சகல அபிவிருத்திகளும் அனைத்தும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திலேயே நடந்தது.இதனை யாரும் மறுக்கமுடியாது.ஆர்ப்பாட்டம் செய்த பட்டதாரிகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும் பட்டதாரிகளுக்கும் மகிந்த சிந்தனை மூலம் தீர்வு வழங்கப்படும்.நாங்கள் மகிந்த சிந்தனையில் பயனடைந்த மக்கள் அதனை மறக்ககூடாது.

இந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்பது தமிழர்களின் பிரச்சினை அல்ல.ஒரு ஜனாதிபதியாக வருவது தமிழர்களுக்கு எட்டாக்கனியாகும்.தமிழன் ஒருவர் ஜனாதிபதியாக எந்தக்காலத்திலும் இங்குவரமுடியாது.இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ஸ என்றால் என்ன எந்த நிறக்கட்சியென்றால் என்ன எமது மக்களுக்கு என்ன கிடைக்கும்,நாங்கள் அபிவிருத்தியடையமுடியுமா என்பது தொடர்பிலேயே சிந்திக்கவேண்டும்.

மகிந்த சிந்தனையில் மிகவும் அதிகமான அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன. அதேபோன்று பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருகின்றன.பல விடயங்களை நாங்கள் இன்று நாங்கள் காண்கின்றோம்.இதுபோன்ற அபிவிருத்தியை வேறு ஒருவர் வந்துசெய்வார் என்று நீங்கள் எண்ணிப்பார்க்கமுடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்துவந்து அதிகாரப்பகிர்வு என்ற குற்றச்சாட்டினை முன்வைப்பார்கள்.அதிகாரப்பகிர்வு என்ன என்பதில் அவர்களுக்கே குழப்பமாகும்.அவர்கள் அதிகாரப்பகிர்வு என்றால் என்ன என்று இதுவரையில் தெளிவாக கூறியது கிடையாது.சமஸ்டி என்றார்கள்,தமிழ் ஈழம் என்றார்கள் இன்று எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொல்கின்றார்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்றால் மகிந்த ராஜபக்ஸவுடன் பேசலாம்.அவரிடம் அதற்குரிய தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.அவர் ஐக்கிய தேசிய கட்சியை விட சிறந்த முறையில் ஆட்சியை செய்துள்ளார்.அவருடன் பல பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு குழம்பியிருந்தாலும் கூட மாகாணசபை முறைமையை அமுலாக்கியது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமாகும்.அழிந்துபோயிருந்த மாகாணசபையை உயிர்கொடுத்து கிழக்கு மாகாணத்தில் முதல் ஆட்சியை ஏற்படுத்தினார்.அடுத்து இன்று வடக்கிலும் அதுவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கட்சி தாவியுள்ளார்.கட்சிக்குள் இருக்கும்போது தனக்கு இருக்கும் பிரச்சினையை முடிக்கமுடியாத ஒருவர் ஜனாதிபதியாகி எவ்வாறு மக்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பார்.அவர் ஒரு துரோகமிழைத்தவர்.துரோகமாக சிந்திக்கின்றார்.பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கு,அவரது புதல்விக்கு விசுவாசமாக இருந்துவிட்டேன் அவர்களுக்காக மகிந்தவை பழிவாங்கவேண்டும் என்றே அவர் வெளியேறினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

அவர் ஜனாதிபதியாக வரப்போவதுமில்லை.ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் முடியாது.நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டுமாகவிருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றில் வேண்டும்.அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது.அதனைவிட சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.இவ்வாறு எல்லாம் மேற்கொள்ளாமல் நூறு நாளில் எப்படி மாற்றுவது.

ரணில் தனது பதவி ஆசைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உடைத்து அதன் ஊடாக ஆட்சியை பிடித்து பின்கதவினால் ஆட்சியை பிடிக்கலாம் என எண்ணுகின்றார்.இது எல்லாம் சிங்கள தலைவர்களுக்குள் இருக்கின்ற,தென்பகுதியில் இருக்கின்ற பிரச்சினை.

தமிழர்களின் பிரச்சினை அதுவல்ல.நாங்கள் நீண்டகாலமாக அடிபட்டு இழந்துள்ளோம்.கிழக்கு மாகாணத்தில் சமூக ரீதியான போட்டி இருக்கின்றது.முஸ்லிம் சமூகம் காலத்துக்கு ஏற்றாற்போல் முடிவுகளை எடுக்கின்றபோது அவர்களின் சமூகம் வளர்ந்துசெல்கின்றது.நாங்களும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வந்தால் அவரிடம் பேரம் பேசி பெற்றுக்கொள்ளலாம்.அந்த சூழலை பிள்ளையான் நான் பெற்றுத்தருவேன். ஆனால் எதிர்க்கட்சிகளினால் உங்களுக்கு எதனையும் பெற்றுத்தரமுடியாது.பாராளுமன்றத்துக்கு சென்று தூங்குவார்கள்.அங்குள்ள உணவுவிடுதியில் நன்றாக உண்ணுவார்கள்.வேறு எதனையும் செய்யமுடியாது.அவர்கள் சுகபோகம் அனுபவிப்பதற்காக மக்கள் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நிலை ஒழிந்துபோகவேண்டும்.

எமது எதிர்காலம் பற்று சிந்திக்கவேண்டும்.எமது பிள்ளைகளின் வேலைவாய்ப்புகள் பற்றி சிந்திக்கவேண்டும்.எமது மண்ணை பசுமையாக்கவேண்டுமாகவிருந்தால் மகிந்த சிந்தனையே எமக்கு மிகவும் பொறுத்தமான விடயம்.ஏனையவற்றை புறந்தள்ளிவிட்டு மகிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பதே சாலப்பொருத்தமானதாகும்.

ஊடாக அடக்குமுறைக்கு மத்தியிலே நேரடியாக விடயங்களை அமுக்குகின்றவர்கள் மத்தியிலே நாங்கள் இன்று பணியாற்றிவருகின்றோம்.
அரசியல் என்பது மக்களை அணிதிரட்டி,வாக்குகள் ஊடாக பேரம்பேசும் சக்தியை உருவாக்குவதாகும்.அதனை நோக்கமாக கொண்டே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிழக்கில் தனித்துவமான அரசியல் சிந்தனையுடன் கட்டியெழுப்பப்பட்டுவருகின்றது.எதிர்காலத்தில் அந்த சாதனையை நாங்கள் பெறுவோம்.

எங்களது எண்ணம் தூய்மையானது,நாங்கள் மக்களுக்கு செய்ய நினைக்கும் சேவை தூய்மையானது என்ற காரணத்தினால் நாங்கள் நினைக்கும் காரியங்கள் நடக்கும் என்று நம்புகின்றோம்.

நாங்கள் எதிர்கட்சிகளினதோ,வெளிநாட்டு சக்திகளின் எண்ணத்துக்கோஅடிபணியாமல் இன்றுதான் நாங்கள் சுதந்திரமாக வாழ்கின்றோம்.நிம்மதியாக வாழ்கின்றோம்.இந்த சூழல் எங்களுக்கு அவசியம்.இதனைப்பாதுகாத்துக்கொண்டு தொடர்ச்சியான அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதற்கு எமது சமூகம் முன்வரவேண்டும்.அதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்று நீங்கள் கருதினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களிக்கவேண்டும்.

Post a Comment

0 Comments