Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்தது

17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்தது தான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர், கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்ட ரீதியில் நடைபெறவில்லை
நடக்க வேண்டியவை சரியான நேரத்திற்கு நடைபெறும் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹொரகொல்ல பண்டாரநாயக சமாதிக்கு சென்ற வேலை அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
தான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர், கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்ட ரீதியில் நடைபெறவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் 17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்தது. கட்சியில் தனக்கு 47 வருடகால அனுபவம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஜனன தினமான டிசம்பர் 8ம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று பண்டாரநாயக்க வழியில் செயற்படவுள்ளதாகவும் சமாதிக்கு அருகில் நின்று மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்தார்.

Post a Comment

0 Comments