ஏறாவூர்- சவுக்கடி கடலில் நேற்று 31.10.2014 கேஎல் ஜவாஹிர் என்பவரது கரைவலையில் பெரும் எண்ணிக்கையிலான பெறுமதிமிக்க கருக்குப் பாரை ரக மீன்கள் சிக்கின.
இவை ஒவ்வொன்றும் தலா 7 கிலோ எடையுடையது. சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது சுனாமிக்கான அறிகுறியாக இருக்குமோ??
நீண்ட காலத்திற்கு பிறகு அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கடற்கரையில் அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. அதேவேளை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெருமளவிலான பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.இப் பெருமளவிலான மீன்களை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். இது சுனாமிக்கான அறிகுறியாக இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
அதன்போதான படங்களை இங்கு காணலாம்.
0 Comments