|
இலங்கையை ஆண்ட இராவணனிடம் விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்யும் சான்றுகள் ஏதும் இல்லை என்று இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் தலைவர் செனரத் திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார். இராவணன் 3ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
|
அவரிடம் விமானங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்ததாகவும் கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை உறுதிப்படுத்தக் கூடிய சான்றுங்கள் எதனையும் கண்டறிய முடியவில்லை என்று திஸாநாயக்க தெரிவித்தார். இராமாணத்தில் இராவணன் புஷ்பக விமானத்தை பயன்படுத்தியே சீதையை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
|


0 Comments