கந்த ஷஸ்டி விரதத்தின் இறுதி நாளான புதனன்று பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போர் நிகழ்வுகளைப் படங்களில் காணலாம். ஆலயத் தலைவர் க.சீவரெத்தினம் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மேகானந்தக் குருக்கள் ஆகம முறைப்படி சூரன் போரை வழி நடாத்தி கிரியைகளை மேற் கொண்டார்.
நூற்றுக் கணக்கான விரததாரர்களும், பக்தர்களும் பொது மக்களும், பெருமளவில் கலந்து கொண்டனர். ஆணவமும் அதர்மமும் நிலைத்து நிற்க முடியாது என்பது இப்போரின் தத்துவம். இப்போர் முன்னாள்; வண்ணக்கர் க.பேரின்பராஜாவின் நேரடி விளக்கவுரையுடன் இடம் பெற்றது விசேட அம்சமாகும்.
0 Comments