Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் தவில் போன்று பெரிதும் பாதிக்கப்படும் இனமாக உள்ளனர்

அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் தவில்போன்று சிங்கள பேரினவாதத்தினாலும். முஸ்லிம் பேரினவாதத்தினாலும் பெரிதும் பாதிக்கப்படும் இனமாக
வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் எமது தாய்க்கட்சியான  இலங்கை தமிழரசுக்கட்சிதான் அனைத்திலும் முதன்மைபெற்று வருகின்றது என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியினரின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்வும், வரவேற்பு பெருவிழாவும்,   27.09.2014 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசசபை   கலாசார மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், தமிழரசிக்கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கம், மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமத்திரன்இ ஈ.சரவணபவன்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான வில்லியம் தோமஸ் மற்றும்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்இ மு.இராஜேஸ்வரன்இகல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகரசபை , பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் கிராமப்பெரியார்கள் என பலரும் கழந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் தற்போது தனது சுயநலத்திற்காக எமது இலங்கை தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் பியசேன தொடக்கம் தற்போதுள்ள பிரதேச சபை வரையுமான அரசியல் களத்திலே இருப்பவர்கள் எமது கட்சியின் உறுப்பினர்களே.
இம்மாவட்டமானது மூன்று இனங்களையும் உள்ளடக்கிய மாவட்டமாகும் அதனடிப்படையிலேதான் இங்கு வாழும் தமிழர்கள் தவில்போன்று சிங்கள பேரினவாதத்தினாலும். முஸ்லிம் பேரினவாதத்தினாலும் பெரிதும் பாதிக்கப்படும் இனமாக எமது இனம் இன்னல்பட்டுக்கொண்டு வருகின்றது இதனை யாராலும் மறுக்கமுடியாது.
நாங்கள் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இனம் இதன்காரணமாக இலங்கை அரசாங்கம் எம்முடன் மோதிக்கொண்டிருக்கின்றது. எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக பல தியாகங்களை செய்திருக்கின்றோம் தற்போது எமக்கான விடுதலை வேண்டி போராடிக்கொண்டிருக்கின்றோம்.
ஆதனடிப்படையிலேதான் தமிழ்ப்பேசும் மக்கள் அனைவரும் இந்த நாட்டிலே நிம்மதியாக வாழவேண்டும் அவர்களுக்கான தீர்வினையும் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றுதான் எமது தலமைகள் அவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு எமது தலமைகள் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுக்கள் நடத்துகின்றபோது இந்த மாவட்டத்திலே உள்ள தமிழர்களது உரிமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் அவர்களது உரிமைகளையும் மதித்து அவர்களது பிரச்சனைகளுக்காகன தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எமது தலமைகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அண்மையில் காரைதீவு பிரதேசத்திலே உள்ள காணி ஒன்று தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக வௌ;வேறு பட்ட குழப்பநிலை தோன்றியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
காரைதீவு சந்தியில் உள்ள ஒரு இடத்தினை தன்வசப்படுத்தி அதில் பள்ளிவாசல் கட்டுவதற்கான முனைப்புக்களை செய்யமுற்பட்டபோது இங்கு இரண்டு சாராருக்குமிடையே முருகல் நிலை உருவானது அங்கு வந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறிய கருத்து என்னவென்றால் மாவை எங்களிடம் கூறியிருக்கின்றார் காணியை எடுக்குமாறு அதனால் உங்களிடம் கதைக்கவேண்டிய தேவை இல்லை என முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் கூறியிருக்கின்றார்கள். இதற்கு முழுவதும் பின்புலத்தில் இருந்தவர்கள் த.தே.கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே நான் உற்பட எமது கட்சியின் தலைவர் மாவை ஐயா, சுமத்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வந்த அரசியல்வாதிகளும் சேர்ந்து இந்நிலம் தொடர்பாக கதைத்தபோது அவர்கள் எங்களிடம் கூறிய கருத்து என்னவென்றால் அந்த இடத்தில் கடைத்தொகுதி ஒன்றினை அமைத்து அதனை காரைதீவு பிரதேசசபை ஊடாக  வாடகைக்கு கொடுப்பதற்கு அனுமதி தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
அதற்கு எமது தலைவர் கூறிய கருத்து ஏற்கனவே பிரதேசசபை தவிசாளராக இருந்தவர் பதவி விலகியிருக்கின்றார் ஆகவே பதிய தவிசாளரது பெயர் வர்த்தமானியில் வந்ததன் பிற்பாடு அவர் பதவி ஏற்று ஒரு மாதத்தின் பின்னர் அது தொடர்பாக எமது கட்சியின் முக்கியஸ்த்தாரகளும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்களும் சேர்ந்து பேசி ஒரு சுமுகமான முடிவிற்கு வந்ததன் பின்னர்  அதற்கான பதிலை தருவோம் என கூறினாரே தவிர எக்காரணம் கொண்டும் எந்த வாக்குறுதிகளையும் முஸ்லிங்காங்கிரசிக்கோ, அதன் செயலாளருக்கோ வழங்கவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் இதனை திரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக த.தே.கூட்டமைப்pல் இருந்து அரசியல் செய்யும் சிலர் மக்களை உசுப்பேத்தி மாவை நிலத்தினை முஸ்லிங்களுக்கு விற்று விட்டார் என கூறி இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக ஒரு குழப்பநிலையை உருவாக்கியிருந்தார்.

Post a Comment

0 Comments