ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றிய இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராகீன் வடக்குஅதற்கு பழி தீர்க்கும் வகையில் மைனாரிட்டி ஆன ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாக்தாத் அருகே உள்ள ஈராக் ராணுவ தளத்தை தீவிர்வாதிகள் கைபற்றினர் அங்கு இருந்த 300 ராணுவ வீரர்களை கொலை செய்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டு உள்ளது. இது போல் ஷியா பிரிவினர் பெருமளவில் உள்ள பல இடங்களில் கொடூர தாக்குதல்களை நடத்தினர்.
|
ஹொரீயா மாவட்டத்தில் 2 கார் குண்டுகள் வெடித் தன. அதில் 20 பேர் பலியா கினர். 35 பேர் காயம் அடைந்தனர். மேலும் இதற்கு அடுத்தாற்போல் உள்ள சப் அல் போர் நகரில் கையெறி குண்டுகள் வீசியதில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.தென் மேற்கு பாக்தாத்தில் உள்ள ஷா பரானியா மாவட்டத்தில் கார் குண்டு வெடித்தது. அதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். அல் ஷலா மாவட்டத்தில் குண்டுகள் வெடித்தன. அதில் 3 பேர் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயம் அடைந்தனர்.
|
0 Comments