Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரசிகர் மன்றத்துக்குப் போகும் விஜய் சிலை

நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மதுரையில் ஒரு சிலை வைத்தது நினைவிருக்கலாம். அது மார்பளவு சிலை. இப்போது சென்னை ரசிகர்கள் அவருக்கு ஒரு சிலை ரெடி பண்ணியுள்ளார்கள்.
இது அவரது முழு உருவச் சிலை. லட்சம் செலவில் இதைச் செய்துள்ள பேஸ்புக் விஜய் ரசிகர்கள், இந்த சிலையை சென்னை குரோம்பேட்டையில், கத்தி படம் திரையிடப்பட்டுள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.
முதலில் இந்த சிலையை போரூர் ஆலப்பாக்கத்தில் நிறுவத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை. எனவே தற்காலிகமாக வெற்றி திரையரங்கில் வைத்துள்ளனர்.
சில தினங்கள் மட்டும் இங்கு வைத்திருப்பார்களாம். அனைத்து ரசிகர்களும் வந்து போகும் இடத்தில் விஜய் சிலை மட்டும் நிரந்தரமாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவு. விரைவில் ரசிகர் மன்ற அலுவலகத்துக்குக் கொண்டுபோய், நிர்ந்தரமாக ஒரு இடத்தில் வைக்கப் போகிறார்களாம்

Post a Comment

0 Comments