கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனிதா தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 2012ம் ஆண்டு தேசிய பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் அனோமா கருணாசேன என்ற மாணவி 19 வயதுக்கு உட்பட்ட கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில் 3.0 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை, அனிதா ஜெகதீஸ்வரன் 3.32 மீற்றர் உயரம் பாய்ந்து முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
|
![]() |
0 Comments