Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட இறால் ஓடைக் பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு

இன்று 16.09.2014 வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட இறால் ஓடைப் பிரதேசத்தில் மக்கள் பாவனைக்காக புதிய வீதி திறந்து வைக்கப்பட்டது. யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் மிக நீண்ட காலமாக அபிவிருத்தி மேற்கொள்ளப்படாது   காட்டு வழிப்பாதையின் மூலம்  மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியிருந்ததினை அடுத்து  கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் பத்து இலட்சம் டூபா நிதி ஓதுக்கீட்டின்  மூலமாக வீதி அபிவபிருத்தி மேற்கொள்ளப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்;களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் ராகுலநாயகி, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ,இணைப்பாளர் ப. தவேந்திர்ராஜா ,ஆ.தேவராஜா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய பரிபாலனசபை உள்ளீட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

              
             
            

Post a Comment

0 Comments