மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதப் புதைகுழி இருக்கும் என இனங்காணப்பட்ட பகுதியினை நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (13) கொழுப்பிலிருந்து வந்த சட்டவைத்திய அதிகாரிகள் குழு ஒன்று பார்வையிட்டுள்ளதுடன், இப்புதைகுழி அமைந்துள்ள சரியான இடத்தினை நீதிமன்றத்தனூடாக அடையாளப்படுத்துமாறு முறைப்பாட்டாளருக்கு ஆலோசனை வழங்கிச் சென்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை கடந்த 18.08.2014 அன்றய தினம் தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா, நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் கடந்த யூலை முதலாம் திகதி களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், அன்றயதினம் உரிய சட்ட வைத்திய நிபுணர்குழு உரிய இடத்திற்கு வருகை தராததையடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 24 தோண்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.

ஆனாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் மாரி மழைகாலம் என்பதால் இவ்விடயத்தினை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பொறியியலாளருமான ஷிப்லி பாறுக் அவர்கள் காணமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி அணைக்குழுவின் தலைவருடன் பேசி சென்றவாரம் பயங்கரவாத புலனாய்வுத் தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பத்திகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்திட்சகர், சட்ட வைத்திய அதிகாரிகள்குழு, மற்றும் அதனோடிணைந்த அனைத்து அதிகாரிகளுடனான சந்திப்பொன்றை நடாத்தியதனூடாக இன்று சனிக்கிழமை (12) 14 பேர் கொண்ட ஓர் நிபுணர்குழுவொன்று குருக்கள்மடம் மனித புதைகுழி இருக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
அதற்கிணங்க நேற்று சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோன் அவர்களின் தலைமையில் சட்ட வைத்தியர்களான சி.கே.இராஜகுரு, கீர்த்தி குணரெத்தின, அஜித் ஜெயசேகர, வைத்தியரெத்ன, உத்கல ஆட்டிக்கல, சியந்த அமரரெத்தின, பந்துல அமரசேகர, மற்றும் மண்பரிசோதனை நிபுணர் பேரசிரியர். நந்தசேன, தொல்பெருள் ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர். ராஜ் சோமதேவ ஆகியோர் கொண்ட குழு அவ்விடத்தில் நேற்றயத்தினம் பிரசன்னமாகியிருந்தது.
இதேவேளை அவ்விடத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அதியட்சகர் எகலவெல, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் றஊப் ஹாயியார் உட்பட பலர் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இக்குழு நேரடியாக குறிப்பிட்ட இடத்தினைப் முறைப்பாட்டாளரின் உதவியுடன் பார்வையிட்டு, இப்புதை குழியை எவ்வாறு தோண்டுவது, இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும், இதனோடு சம்மந்தப்பட்ட வேறு எந்தெந்த திணைக்களங்கள், சம்மந்தப்பட வேண்டும், போன்ற பல விடையங்கள் தொடர்பில் விரிவாய ஆராய்ந்நு அறித்து கொண்டது.
இந்நிலையில் குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசத்தல் இரண்டு பக்கமும் 2 இந்து மயானங்கள் இருந்தன. அதில் இந்துக்களின் உடல்கள் இந்து சமய முறைப்படி அடக்கம் செய்யப் பட்டுள்ளன. இவர்கள் அவர்களது புதைகுழி தோண்டும்போது எமது உறவுகளின் உடல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் செயற்பட வேண்டும் என அங்கு பிரசன்னமாகியிருந்த வைத்திய குழுவிடமும், பொலிஸ் அதிகாரிகளிடமும், குருக்கள்மடம் இந்து இளைஞர் மன்றத் தலைவர் எஸ்.சுதர்சனன் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே அவ்விடத்தில் வருகை தந்திருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கும், முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் றஊப் ஹாஜியார் அவர்களுக்கும், இடையில் இப்புதைகுழி தோண்டுவதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும், உரிய இடத்தினை அடையாளப்படுத்துவது தொடரபிலும், அவ்விடத்தில் வைத்து கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோன். குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா, நீதவான் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவ்விடத்தினைப் பார்வையிட வந்துள்ளோம். இங்கு வந்து பார்த்த போதுதான் தென்படுகின்றது முஸ்லிம் மக்களிடத்திலும் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளதென்பதையும், இதனைவிட தமிழ் மககள் சார்பிலும் குருக்கள்மடம் கிராமத்திலுள்ள இந்து அமைப்பு ஒன்றும் இப்பகுதியில் இரண்டு இந்து மயானங்கள் இருந்ததாகவும் சொல்லுகின்றார்கள்.
இப்பகுதியில் 6 அடி தோண்ட வேண்டும் என சொல்லப் படுகின்றது. ஆனால் 6 அடி தோண்டமுடியாது 6 தோண்டினால் நிலத்திலிருந்து தண்ணீர் வந்துவிடும்.
இதனை தோண்டுவதாக இருந்தால் நீதிமன்றத்தனூடாக பொலிசர், மற்றும் பிரதேச சபையூடாக சரியான இடத்தினை அடையாளப் படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இதனை தோண்ட முடியும். என சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோன் இதன்போது மேலும் தெரிவத்தார்.
0 Comments