|
அமெரிக்காவின் லூசியானாவில் வசிப்பவர் தேவேந்தர் சிங். 62 வயது இந்தியரான இவர் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் சென்றார். அவரது இருக்கைக்கு அருகே அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் அமர்ந்து பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறக்க தொடங்கியதும் பெண் பயணி அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது தேவேந்தர் சிங் அந்தப் பெண்ணின் முகத்தோடு முகம் உரசி முத்தம் கொடுத்தார்.
|
தொடர்ந்து பெண்ணிடம் செக்ஸ் தொல்லை கொடுத்தார். உடனே திடுக் கிட்டு விழித்து எழுந்த பெண் பயணி கூச்சல் போட்டார். இதுபற்றி விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். விமானம் தரை இறங்கியதும் தேவேந்தர் சிங் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1� கோடி அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
|


0 Comments