20 பாடசாலைகளைக் கொண்ட வாகரைப் பிரதேசத்தில் 17 பாடசாலைகள் முறையான காணி அனுமதி இல்லாது இயங்குவதாக பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி விசனம் தெரிவித்துள்ளர்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாக சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார் இங்கு மேலும் உரையாற்றுகையில் பாடசாலைகளுக்கான காணிகள் வரையறுத்து அதற்கான உறுதிப்பத்திரங்களை பிரதேச காணி பண்பாட்டுக் குழுவினால் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாவட்ட காணி பண்பாட்டு குழு அனுமதியுடன் மாகாணசபைக்க அனுப்பி வைக்க வேண்டும்.
இச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கல்குடா பணிமனை ஊடாக தமக்கு காணிகோரல் கடிதம் அனுப்பிவைக்கும்படி பலமுறை கல்குடா கல்விப்பணிப்பாளருக்கும் கல்வி அதிகாரிகளிடமும் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்


0 Comments