Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழக மீனவர்கள் வௌ்ளைக் கொடியுடன் இன்று கச்சதீவு வருகின்றனர்

இலங்கை கடற்படையினர் பறித்து சென்ற 62 விசைப்படகுகளை மீட்பதற்காக கச்சத்தீவுக்கு புதுகை மீனவர்கள் இன்று வருகின்றனர்
 
தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் அவர்களது படகுகளையும் பறித்து செல்லும் செயலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 
 
இந்த நிலையில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்ட விசை படகுகளை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25–ந்திகதி முதல் புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போன்று ரமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களும் 6–வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். 

Post a Comment

0 Comments