கிழக்கு மாகாணத்தில் நான்காவது கண்ணகி கலை விழா இன்று வெள்ளிக்கிழமை காலை விழாக்குழு தலைவரும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வண்ணக்கருமான வண்ணியசிங்கம் ஜெயந்தனின் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.
இவ் இலக்கிய விழாவானது இன்று முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடம்பெறவுள்ளது.
ஆரம்ப நாளான இன்று (1) பண்பாட்டு பவனி, திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரக்குமார், கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எல்.விக்ரம ஆராச்சி, பேராசிரியர் சி.மௌனகுரு, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், தொல்லியல் ஆய்வாளர் க.தங்கேஸ்வரி, கண்ணகி கலை இலக்கிய கூடல் தலைவர் த.கோபாலகிருஷ்ணன் மற்றும் கலை இலக்கிய ஆர்வளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
0 Comments