நவக்கிரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பலியானதை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் ஊர் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டது. நவக்கிரி - புத்தூர் சரஸ்வதி வீதியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் 3 மாத கர்ப்பிணி பெண்ணான, கவிந்திரன் சுபாஜினி (வயது 23) அந்த இடத்திலேயே மரணமானார். சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் குறித்த டிப்பர் வாகனத்தை தீக்கிரையாக்கியுள்ளனர். குறித்த டிப்பர் வாகனம் ஈபிடிபியினரால் நிர்வகிக்கப்படும் மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமானது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|
![]() ![]() |
0 Comments