யாழ். குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயம் அண்மையில் அமெரிக்காவின் செய்மதி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசசார்பற்ற அமைப்பு ஒன்றின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதானம் மற்றும் நீதி என்ற அடிப்படையில் செயற்படும் இந்த அமைப்பில் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனால் இலங்கை தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்த யஸ்மின் சூக்கா மற்றும் மை டோட்டர் தெ ரெரரிஸ்ட் என்ற படத்தை தயாரித்த நோர்வேஜிய தயாரிப்பாளர் பீட் ஆர்னெஸ்டெட் ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
|
இதனைதவிர, பேராசிரியர் அடெல் பார்கர், இலங்கைக்கான முன்னாள் உதவி உயர்ஸ்தானிகர் புருஸ் ஹை, செய்தியாளர் டி திஸ்ஸநாயகம் ஆகியோரும் இந்த அரசசார்பற்ற அமைப்பில் அங்கம் வகிப்பதாக ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
குறித்த செய்மதி அமெரிக்கன் எசோசியேசன் எட்வான்ஸ்மென்ட் ஒப் சயன்ஸ் என்ற நிறுவத்தினால் காங்ககேசன்துறை மற்றும் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கண்காணிக்கும் வகையில் செயற்படுத்தப்படுவதாக நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2009 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய அரச சார்பற்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற காலத்திலும் அமெரிக்கா, வன்னி போர்க்கள செய்மதி படங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments