பனை அபிவிருத்திச் சபையின் கண்காட்சியும் சுயதொழில் வாய்ப்புக்கான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி; அபிவிருத்தியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட பனம்பொருட்கள் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் இக்கண்காட்சியின் ஆரம்ப வபைவம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரட்னம், மற்றும் பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வி க.தங்கேஸ்வரி, பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் சந்தானம் மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்னம், செங்கலடி பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறி,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பனை அபிவிருத்திச் சபை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது திறந்துவைக்கப்பட்ட கண்காட்சியில் பனம் பொருளினால் உற்பத்தி செய்யப்பட்ட பல உற்பத்திப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பனம்பொருள் உற்பத்திகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பனை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சுமார் 200 பேருக்கான வட்டியில்லா கடன் திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் வாழ்வாதார மேம்பாட்டு கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்டுவந்த பனை உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments