வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஆற்றில் ஓட்டமாவடி பாலத்தில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னால் உள்ள ஆற்றில் இருந்து இந்த இளைஞனின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இவர் தொடர்பான தகவல்களைபெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு தோணியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கண்டு தெரியப்படுத்திய தகவலையடுத்தே பொது மக்களின் உதவியுடன் சடலம்
எடுக்கப்பட்டதாகவும், இச்சடலம் மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments