Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் இருந்து எந்தப்பெண்ணும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகக் கூடாது நஸீர் அஹமட்

“கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து வறு­மைக்­குட்­பட்ட எந்தப் பெண்­களும் வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக மத்­தியகிழக்கு நாடு­க­ளுக்கு போகக் கூடாது என்­பதே எனது இலக்கு என்று கிழக்கு மாகாண விவ­சாய கால்­நடை உற்­பத்தி அபி­வி­ருத்தி, கிரா­மிய கைத்­தொழில் அபி­வி­ருத்தி, அமைச்சர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.
ஏறா­வூரில் 500 வித­வை­க­ளுக்கு உல­ரு­ணவுப் பொதி­களும் மேலும் வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த குடும்­பங்­க­ளுக்கு தையல் இயந்­தி­ரங்­களும் வழங்கி வைக்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
ஏறாவூர் காட்­டுப்­பள்ளி குல்­லிய்­யத்து தாறில் உலூம் அறபுக் கல்­லூரி மண்­ட­பத்தில் நடை­பெற்ற இவ் வைப­வத்தில் அவர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
அவ்­வாறு வேறேதும் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்­வ­தாக இருந்தால் அது பயிற்­றப்­பட்ட உயர் தொழில் ஆற்­றல்­க­ளோடு கூடிய தொழில் வாய்ப்­புக்­க­ளுக்­கா­கவே அவர்­களை அனுப்ப வேண்டும்.கல்­வி­ய­லா­ளர்­க­ளாக அல்­லது மருத்­துவத் தாதி­க­ளா­கவே இனி வரும் காலங்­களில் மத்­திய கிழக்கு செல்­வ­தற்கு நாம் இங்­குள்­ள­வர்­களை உரு­வாக்க வேண்டும். வெறு­மனே அடுப்­பங்­கரை வேலை செய்யும் அடி­மை­க­ளாக அறபு தேசங்­க­ளுக்குச் செல்ல வேண்­டி­ய­தில்லை.
இன அடிப்­ப­டையில், முஸ்­லிம்கள் என்ற வகையில் கடந்த காலப் பயங்­க­ர­வா­தத்தின் இலக்­காக இந்த ஏறாவூர் இருந்­தது. அதனால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்டு இந்த ஊர் திறந்த வெளி அகதி முகா­மாக மாறி­யி­ருந்­தது. ஒரே இரவில் 162 பேர் வெட்­டியும், குத்­தியும், அடித்தும், தீயிட்டும் கொளுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள்.
அந்­நே­ரத்தில் பலர் வித­வை­க­ளாக்­கப்­பட்­டார்கள். ஏறா­வூரில் தற்­போது 2000 ஆயிரம் பேர் வித­வை­க­ளாக உள்­ளார்கள். ஏறாவூர் மக்­களை எங்கோ ஒரு பகு­திக்கு விரட்ட வேண்டும் என்­ப­தற்­காக பயங்­க­ர­வா­திகள் இந்த ஊரைச் சூழ்ந்­தி­ருந்து மாதக்­க­ணக்கில் தாக்­கிய இருள் சூழ்ந்த கால­மொன்­றி­ருந்­தது. தொழி­லுக்குச் செல்ல முடி­யாத அகதி முகாம் வாழ்க்­கை­யாக நாட்கள் நகர்ந்­தன. அத­னா­லேயே பல பெண்கள் இங்­கி­ருந்து தமது வாழ்­வா­தா­ரத்தைத் தேடி வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக மத்­திய கிழக்­கிற்குப் புறப்­பட்­டார்கள்.
இனிமேல் இந்த நாட்டில் இந்த இரண்டு சூழ்­நி­லை­களும் உரு­வாகக் கூடாது. அதா­வது பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்­கவும் கூடாது. பெண்கள் மத்­திய கிழக்­கிற்கு பணிப்­பெண்­க­ளா­கவும் செல்லக் கூடாது.
எங்­க­ளது கடமை பாதிக்­கப்­பட்ட எல்லா மக்­க­ளுக்கும் தமிழ், முஸ்லிம், சிங்­களம் என்ற வேறு­பா­டில்­லாமல் அவர்­களை பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தே­யாகும். எதிர்­கா­லத்தில் இந்த ஊரை ஒரு நவீன தொழி­லுற்­பத்திப் பேட்­டை­யாக மாற்­று­வதே நோக்­க­மாகும்.
யாரும் பிறரின் உத­வியில் தமது வாழ்­வா­தா­ரத்­திற்­காக தங்­கி­யி­ருக்­காத நிலைக்குக் கொண்டு வர­வேண்டும். நிவா­ர­ணங்­க­ளையும் இன்ன பிற உத­வி­களையும் எதிர்­பார்த்­தி­ருக்­காத சொந்தக் காலில் நின்று உழைக்கக் கூடிய மக்­க­ளாக இவர்­களை மாற்ற வேண்டும். அடுத்த வருட றமழான் நோன்­பிற்­கி­டையில் இந்த ஊரில் குறைந்தபட்சம் பல்­வேறு வித­மான நான்கு தொழிற்­சா­லைகள் இயங்கும். அதில் பல­நூறு பெண்­களும் ஆண்­களும் தொழில் வாய்ப்பைப் பெறு­வார்கள்” என்றார்.
கொடை வள்­ளல்­களும் முத­லீட்­டா­ளர்­க­ளு­மான இந்­தி­யாவைச் சேர்ந்த ராஜ­சேகர் ரெட்டி, லண்­டனைச் சேர்ந்த கலா­நிதி முஹம்மத் ஹரீஸ் ஸைனு­லாப்தீன் சவூதி அரேபியா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஷெய்க் அப்துல்லாஹ் ஷெய்த் அல் மலெய்ஹி இலங்கையைச் சேர்ந்த கே. சுரேந்திரா, ஹமீடியா முகாமையார் பாயிஸ் அலவி ஆகியோர் உட்பட ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments