உலகத்தின் கவனம் நேற்றிரவு பிரேஸில் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் வசம் திரும்பியிருந்த சமயத்தில் காஸாவிற்கு சோகமான இரவாக அமைந்தது.
பலஸ்தீன இராணுவத்தினரால் நேற்றிரவு இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணை தாக்குதல்கள் பலஸ்தீனத்தால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹமாஸிற்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கையினை மேலும் விஸ்தரிக்கப் போவதாகவும், காஸாவிலுள்ள தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதே தமது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ எச்சரித்துள்ளார்.
0 Comments