பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று காலை பெண் ஒருவர் ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இந்த குழந்தைகளில் நான்கு ஆண் குழந்தைகளும், பெண் குழந்தையொன்றும் அடங்குவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஜயபந்து ஹேரத் குறிப்பிடுகின்றார்.
36 வயதான தாயொருவர் இன்று காலை 9.30 அளவில் இந்த குழந்தைகளை பிரசவித்ததாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
30 வாரங்கள் கர்ப்பம் தரித்திருந்த பின்னர் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிரசவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த குழந்தைகள் சுமார் ஒருகிலோகிராம் நிறையுடன் காணப்பட்டதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் கூறினார்.
குழந்தைகள் ஐவரும் விசேட குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தாயார் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments