மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக எம்.தயாபரன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிதிட்டத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக எம்.தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் முதல் நியமனமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து உள்ளுராட்சி உதவி ஆணையாளர்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆகிய பதவிகளை வகித்துவந்தார்.
இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments