மட்டக்களப்பு கிரான்குளம் பிரதான வீதியில், ரீமா பாதணிகள் உற்பத்தி நிலையத்தின் இணை உற்பத்தி நிலையமான பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து உற்பத்தி நிலையமான லியாக் அண்மையில் யுஎஸ்எயிட் மி~ன் பணிப்பாளர்
திருமதி n~றி கார்லினால் வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யுஎஸ்எயிட் நிறுவன பணிப்பாளர்களில் ஒருவரான ஜென்பர், ரீமா நிறுவனத் தலைவர் சரத் பெரேரா, முகாமைத்துவப் பணிப்பாளர் உடினி நகின்வல . தொழிற்சாலை முகாமையாளர் நாகேந்திரராஜா, விநியோகஸ்தர் கோபி தம்பதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உற்பத்தி நிலையம் சுனாமியாலும், யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட விதவைக் குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு நீண்டகால தொழிலை வழங்கும் நோக்கத்துடன் ரீமா நிறுவனத்திற்கு யுஎஸ்எயிட் நிறுவனம் வழங்கிய நிதி பங்களிப்புடன் லியாக் என்ற உற்பத்தி நாமத்துடன் ரீமா நிறுவனத்தின் இணை நிறுவனமாக இத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ளது.
இதற்கான காட்சியறையும் முகாமைத்தவப் பணிப்பாளர் உடுனி நகின்வலவால் சம்பிரதாயபுர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. முதல் விநிpயோகம் விநியோகஸ்தர் கோபி தம்பதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
செட்டிபாளையத்தில் ஏற்கனவே சிலிப்பர் உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த தரத்தடன் பாதணிகள் விற்பனையில் ரீமா என்ற வர்த்தக நாமம் வாடிக்கையாளர் மத்தியில் பிரபல்யம் பெற்று வருகின்றது. இத் தொழிற்சாலையிலும் இப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..
புதிதாக அரம்பிக்கப்பட்டு திறந்தவைக்கப்பட்டள்ள பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து உற்பத்தித் தொழிற்சாலையும் தரமான சப்பாத்தக்களை உற்பத்திசெய்து விநியோகம் நடைபெற்று வருகின்றது. இத் தொழிற்சாலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைக் குடும்பங்களில் இருந்து தொழிற்சாலை அமைந்துள்ள பிரதெசத்தை அண்டியுள்ள கிராமங்களான புதுக்குடியிருப்பு, கிரான்குளம், குருக்கள்மடம். செட்டிபாளையம், மாங்காடு களுதாவளை ஆகியவற்றிலிருந்து தோந்தெடுக்கப்பட்ட விதவைகள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், விசேட தேவையுடையோரும் என சுமார் 100 பேர் தோந்தெடுக்கப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

0 comments: