Home » » 2014உலக்க்கிண்ண கால்பந்தாட்டப்போட்டி தொடர்பான மீள் பார்வை

2014உலக்க்கிண்ண கால்பந்தாட்டப்போட்டி தொடர்பான மீள் பார்வை

24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அணி உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது.
கடைசியாக 1990–ல் இத்தாலியில் நடந்த போட்டியில் இதே அர்ஜென்டினாவை 1–0 எனற் கோல் கணக்கில் வென்று கோப்பையை வென்று இருந்தது.
 
1994, 1998–ல் கால் இறுதியில் தோற்ற அந்த அணி 2002–ல் இறுதிப் போட்டியில் பிரேசிலிடம் தோற்றது. 2006 மற்றும் 2010–ல் அரை இறுதியில் தோல்வி அடைந்தது. தற்போது சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.
 
 
மொத்தம் உள்ள 64 ஆட்டத்தில் 171 கோல்கள் அடிக்கப்பட்டன. ஒரு ஆட்டத்துக்கான சராசரி கோல் 2.67 ஆகும்.
 
மொத்தம் 187 மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 10 சிவப்பு அட்டை இந்த போட்டித் தொடரில் காட்டப்பட்டு நடுவரால் வெளியேற்றப்பட்டனர்.
 
உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 20–வது போட்டி பிரேசிலில் முடிந்தது. 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது.
 
 
சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு: கோப்பையை வெல்ல முடியாததால் ஏமாற்றம் 
 
20–வது உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படும்.
 
இந்த விருதை பெறுபவருக்கான 10 பேர் கொண்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு இருந்தது. லியோனல் மெஸ்சி, டிமரியா, மாசிரோனா (அர்ஜென்டினா), தாமஸ், முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், ஹம்மல்ஸ் (ஜெர்மனி), ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மர் (பிரேசில்), ரோபன் (நெதர்லாந்து) ஆகியோரது பெயர் இடம் பெற்று இருந்தது.
 
இதில் அர்ஜென்டினா கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான மெஸ்சி சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை பெற்றார்.
 
சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டாலும் அர்ஜென்டினா கோப்பையை வெல்ல முடியாததால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
 
தங்க பந்து விருதை பெற்றபோது அவரது முகத்தில் எந்த சலனும் இல்லை. கோப்பையை இழந்த ஏமாற்றம் அவரது முகத்தை காட்டி கொடுத்தது.
 
அர்ஜென்டினா அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்து மரடோனா போல் பெருமை பெற இருந்த நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
 
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 4 முறை வென்ற அவரால் அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று தர இயலவில்லை. இனி இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
 
அடிக்கடி மைதானத்தில் வாந்தி எடுத்த அவரால் முழு திறமையுடன் விளையாட முடியவில்லையா? என்ற சந்தேகம் இறுதிப் போட்டியில் ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிஷ்டமே.
 
மெஸ்சி கூறும்போது, ‘‘இந்த நேரத்தில் தங்க பந்து விருது ஒரு விஷயமில்லை. உலக கோப்பைதான் முக்கியம். அதை கைப்பற்ற முடியாமல் போனது ஏமாற்றமே. நாங்கள் சிறப்பாக விளையாடி தோல்வி அடைந்ததுதான் மனதை மிகவும் பாதித்துள்ளது'' என்றார்.
 
அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் தோற்பது இது 3–வது முறையாகும்.
 
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் வென்றது.
 
அர்ஜென்டினா 1970–ம் ஆண்டு உருகுவேயிடம் 2–4 என்ற கோல் கணக்கிலும், 1990–ல் ஜெர்மனியிடம் 0–1 என்ற கணக்கிலும் தோற்று இருந்தது. தற்போது அதே ஜெர்மனியிடம் 0–1 என்ற கோல் கணக்கில் தோற்று 3–வது முறையாக கோப்பையை இழந்தது.
 
தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்தது.
தென் அமெரிக்காவில் இதற்கு முன்பு 4 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. 1930–ல் உருகுவேயில் நடந்த போட்டியில் உருகுவேயும், 1950–ல் பிரேசிலில் நடந்த போட்டியில் உருகுவேயும், 1962–ல் சிலியில் நடந்த போட்டியில் பிரேசிலும், 1978–ல் அர்ஜென்டினாவில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவும் சாம்பியன் பட்டம் பெற்றன. பட்டம் வென்ற இந்த நாடுகள் அனைத்தும் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளவையாகும்.
 
தற்போது 5–வது முறையாக தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் நடந்த போட்டியில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி பட்டம் பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சகாப்தம் படைத்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |