Advertisement

Responsive Advertisement

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம்


298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். 

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து 11.22 மணிக்கு புறப்பட்டது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் பிளைட் இன்பர்மேஷன் ரீஜனில் பறந்திருக்கும். ஆனால், பைலட் சாதுர்யமாக யோசித்து பயணத் தடத்தை மாற்றியதால் மோடி சென்ற விமானத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உக்ரைன் மீதான லிவைவ் வழித்தடம், சிம்ஃபெர்பூல் வழித்தடம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலேயே சென்று வந்தன. ஆனால் கடந்த ஏப்ரலில் ஐ.நா விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட உத்தரவின் பேரில் அனைத்து விமானங்களும் லிவைவ் வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கின. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.நா இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments