Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெடித்துக் சிதறிய மலேசிய விமானத்தில் இருந்து உயிர் தப்பிய பிரித்தானிய ஜோடி (படங்கள், வீடியோ)

நெதர்லாந்தில் இருந்து மலேசிய நோக்கி வந்த MH 17 என்ற விமானம் நடுவானில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதால் அதிலிருந்த 298 பேர் ஸ்தலத்திலேயே மரணமெய்தினர். குறித்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பிரித்தானிய ஜோடி ஒன்று அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள செய்தி தற்போது வெளியில் வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இவ்விமானத்தில் ஆசனங்கள் இல்லை என இவரகளுக்கு இவ்விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த குறித்த ஜோடி, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி தம்மை இந்த விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளதாக குறிப்பிட்டனர். அந்த வீடியோவைக் கீழே பார்க்கலாம்.



அதே நேரம் விமானத்தில் பயணித்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் விமனத்தில் ஏற முன்னர் விமானத்தைப் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றி இருந்தார். அதில் அவர் "இதுவே நான் செல்லும் விமானம். திடீரென காணாமல் போய் விட்டால் இதனைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

அவர் பேஸ்புக்கில் தரவேற்றியிருந்த படத்தையும் அவரது படத்தையும் கீழே காணலாம்.






Post a Comment

0 Comments