Advertisement

Responsive Advertisement

பறவைக்காவடி முறிந்து வீழ்ந்ததால் இளைஞன் பலி

கொக்கட்டிச்சோலை  பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்ற பறவைக் காவடி எடுக்கும் வைபவத்தில் உழவு இயந்திரம் புரண்டதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.  ஆலயம் ஒன்றின் உற்சவத்தில் இருவர் உழவு இயந்திரத்தில்  பறவைக் காவடியில் தொங்கியவாறு சென்றதுடன் மேலும் மூவர் இயந்திரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கொங்கிறிட் வீதியால் சென்றபோது உழவு இயந்திரத்தின் டயர் பள்ளத்தில் வீழ்ந்தபோது இவர்கள் தொங்கிச் சென்ற மரம் முறிந்துவிடவே உழவு இயந்திரத்தில் பயணம் ஏனைய மூன்று பேர் மீது விழுந்து, உழவு இயந்திரம் புரண்டுள்ளது. இதில் 24 வயதான இளைஞர் உயிரிழந்ததாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments