Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஓமந்தையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பஸ்! - இராணுவப் புலனாய்வாளர் பலி, 14 பேர் காயம்

வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன்,14இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆர்.எம்.ரத்நாயக்க (வயது - 29) என்பவரே உயிரிழந்துள்ளளார். இவர் இராணுவ புலனாய்வு துறையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் இரண்டு அம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. வவுனியா மருத்துவமனை தகவல்களின்படி, அங்கு 12 பேர் படுகாயமடைந்த நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஆறுமாத குழந்தை உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. புளியங்குளம், ஓமந்தை மருத்துவமனைகளுக்கும் காயமடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments