Home » » கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தின் கீழ் கரையோரங்களையும்,சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல்

கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தின் கீழ் கரையோரங்களையும்,சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல்

கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தில் கரையோரங்களையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாகும் செயற்திட்டமானது பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின்; கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய நிலையான கரையோர வலய திட்டமானது 
 
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக மேற்பார்வையின்கீழ்  65 குடும்பங்களுக்கு (பயனாளிகளுக்கு) மக்கள் பங்களிப்புடன் ஒரு குடும்பத்திற்கு சுமார் 64 ஆயிரம் ரூபா பெறுமதியான மலசல கூடங்களை  அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்ப்டடுள்ளது.
 
இத்தீர்மானம் அண்மையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இவர் குறிப்பாக பனிச்சங்கேணி வாவிக்கரையோர மக்களுக்கு கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தின் கீழ் கரையோரத்தை பாதுகாக்கும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் செயற்தி;ட்டம் வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.நவிதரன் அவர்களும், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர்  திரு.எ.கோகுலதீபன் அவர்களும், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களான திரு.ஜீ.விஜயதர்சன், திரு.கே.ரூபன் அவர்களும், கண்காணிப்பு உத்தியோகத்தர் செல்வி. கீர்த்திகா அவர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |