Advertisement

Responsive Advertisement

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்டம்


அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தாமாகவே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் 1412, இச்செயலகத்தில் ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும்  அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும் அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளையோ நடத்த முடியாது என்று கடந்த திங்கட்கிழமை இச்செயலகம் சுற்றறிக்கையின் ஊடாக சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தது. 

இதனை அடுத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சமன் திஸாநாயக்க இவ்வறிப்பை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments