Advertisement

Responsive Advertisement

அவுஸ்ரேலிய அகதிகள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டுக்கு எதிர்ப்பு!

அவுஸ்ரேலியாவில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 அகதிகள் தொடர்பாக இந்தியாவுடன் அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்ளும் முனைப்புக்கள் சட்டரீதியானதாக இருக்காது என்று அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அகதிகள் இந்திய அதிகாரிகளின் அடையாள சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்திருந்தார். இந்த அகதிகளில் இந்தியர்கள் இருந்தால் அவர்களை பொறுப்பேற்க இந்தியா உறுதியளித்திருந்ததன் அடிப்படையிலேயே இந்த சோதனை இடம்பெறவுள்ளதாக மொரிசன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அகதி அந்தஸ்து கோரிவோர் வள நிலைய நிறைவேற்று அதிகாரி கொன் கராபனகியோடிட்டீஸ், அகதிகளை அவுஸ்ரேலிய நிலப்பரப்புக்கு அழைத்து வரும் நடவடிக்கையை வரவேற்றுள்ள போதும், அதில் இந்திய தலையீடு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இன்னொரு நாட்டிடம் அகதிகள் விடயத்தை கையாள வழங்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஆள் ஒருவர் மூன்றாம் நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்தவர் என்றால் அவர் அகதியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். அதுவே சட்டநடைமுறையாகும். இதனை மற்றும் ஒரு அரசாங்கம் எவ்வாறு கையாளமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இதற்கு எதிராக சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கொன் கராபனகியோடிட்டீஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments