Advertisement

Responsive Advertisement

அமைச்சர் எஸ்.பி. வீட்டருகே கண்டிய மன்னன் இராஜசிங்கனின் புதையல் பெட்டகம்!

1800 ல் கண்டியை ஆண்ட இராஜசிங்க மன்னனின் பெட்டகம் ஒன்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி.திஸாநாயக்கவின் வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். கண்டிக்கு அருகில் உள்ள ஹங்குராங்கெத்தையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இலங்கையை பற்றி வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்ட ரொபட் நொக்ஸின் புத்தகத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை வளவ்வ என்ற இடமே இராஜசிங்கனின் தலைநகராக இருந்ததாகவும் நொக்ஸ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மன்னன் இராஜசிங்கனின் பெட்டகம் இருப்பதாக கூறப்படும் இடத்தை அகழ்வதற்கு அமைச்சர் எஸ். பி.திஸாநாயக்கவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. எனினும் இன்னும் அவர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்று அகழ்வாராய்ச்சி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரொப்ட் நொக்ஸின் புத்தக்கப்படி குறித்த பெட்டகத்தில் இராஜசிங்க மன்னன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவரின் ஆடைகள் உட்பட்ட பல பொருட்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments