Advertisement

Responsive Advertisement

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி: நால்வர் கைது

கொழும்பு, தெஹிவளையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தி வந்த விபசார விடுதியில், குற்றப்புலனாய்வு பிரிவினர் வெள்ளிக்கிழமை (25) திடீர் சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது சோதனையிடப்பட்ட விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களும் விடுதி உரிமையாளரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொஹூவளை  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று சனிக்கிழமை (26) கங்கொடவில நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments