Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் வீடுகள் இன்றி வாழ்க்கை நடாத்தும் மக்கள்

மட்டக்களப்பு  மாவட்டத்தின் , 136  கிராமங்களை  உள்ளடக்கிய , 43  கிராம  அலுவலர்  பிரிவுகளைக்கொண்ட  போரதீவுப்பற்று  பிரதேச  செயலகப்பிரிவில்  747  குடும்பங்கள்   வீடுகள்  இன்றி   உள்ளதாக  பிரதேச  செயலாளர்  என்.வில்வரெத்தினம்  தெரிவித்தார்.
2219  பேர்  தற்காலிக  வீடுகளில் வசித்து  வருவதாகவும்  அவர்  சுட்டிக்காட்டினார்.6000  குடும்பங்கள்  குடி  நீர்  வசதி  இன்றி  அவதியுறுவதாக  தெரிவித்த  பிரதேச  செயலாளர்  5602  குடும்பங்கள்   மலசல  கூட   வசதி  இன்றி  வாழ்க்கையை  இட்டுச்செல்வதாகவும்   கவலை  தெரிவித்தார்.  குடிநீரை  பெற்றுக்கொள்ள  நீண்ட  தூரம்  செல்வதாக   தெரிவித்த  பிரதேச   செயலாளர்   மீள் குடியேற்றத்தின்  பின்  படிப்படியாக  இக்குறைபாடுகள்  நிவர்த்தி  செய்யப்பட்டு  வருவதாகவும்    அவர்  மேலும்  தெரிவித்தார். அத்துடன்போரதீவுப்பற்று பிரதேச  செயலகப் பிரிவில் 50.5  சதவீதமான  மக்கள்  மின்சாரமின்மையால்  மண்ணெண்ணெய்  விளக்குகளை  பயன்படுத்துவதாக அப்பிரதேச  செயலாளர்  என்.வில்வரெத்தினம்  தெரிவித்தார்.
இந்த நிலையில், இங்கு 49.2  சதவீதமான  மக்களே    மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 17  குடும்பங்கள்  சூரியசக்தி   மின்சாரத்தையும் 10  குடும்பங்கள்  உயிரியல்  வாயுவையும் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மீள்குடியேற்றத்தின் பின்னர்  போரதீவுப்பற்று   பிரதேச  செயலகப் பிரிவிலுள்ள  கிராமங்களுக்கு  மின்விநியோகிக்கப்பட்டுள்ளது.   எஞ்சிய  கிராமங்களுக்கும்     மின்விநியோகிப்பதற்கு   நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச  செயலகப்பிரிவின்  45  கிராமசேவகர்  பிரிவுகளில்  2872  குடும்பங்கள் நிரந்தர  வீட்டு  வசதிகள்  இன்றி  வாழ்வதாக   மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச  செயலாளர்  எஸ்.கோபாலரத்தினம்   தெரிவித்தார்.மாங்காடு,தேத்தாத்தீவு,களுதாவளை,களுவாஞ்சிக்குடி,குருமன்வெளி,கோட்டைக்கல்லாறு,ஓந்தாச்சிமடம்,மகிழூர், போன்ற  கிராமங்களில்  அதிகளவு  எண்ணிக்கையானோர்  வீட்டு வசதிகள்  இன்றி  சீவியம்  நடாத்துவதாக   அவர்  சுட்டிக்காட்டினார்.5257  குடும்பங்கள்  45 கிராமசேவகர்  பிரிவுகளிலும்  மலசல கூட  வசதி  இன்றி  உள்ளதாக  அவர்  சுட்டிக்காட்டினார்.மாங்காடு,தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி, ஓந்தாச்சிமடம், போன்ற  கிராமங்களில்  மலசல கூட  வசதி  இன்றி  வாழ்பவர்கள் அதிகம்  என  பிரதேச  செயலாளர்  கவலை  தெரிவித்தார். மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச  செயலகப்பிரிவின்  45  கிராமசேவகர்  பிரிவுகளிலும்  6900  குடும்பங்கள்  குடிநீpர்   வசதி  இன்றி  அவதியுறுவதாக   பிரதேச  செயலாளர்  மேலும்  தெரிவித்தார்.

Post a Comment

0 Comments