Advertisement

Responsive Advertisement

கணவன் தீக்குளித்து பலி

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமஸ்லேன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். 
 
இன்று பகல் 12.30 அளவில் இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 
 
சம்பவத்தில் 46 வயதான குலேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
பலியான நபருக்கும் அவரது மனைவிக்கும் நேற்று இரவு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தநிலையில் இன்று தனது மனைவி பணி புரியும் இடத்துக்குச் அருகில் வைத்தே இவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments