Home » » நுளம்பை கட்டுப்படுத்தும் பொறி ஒன்றை பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டுபிடித்துள்ளார்

நுளம்பை கட்டுப்படுத்தும் பொறி ஒன்றை பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டுபிடித்துள்ளார்


டெங்கு மற்றும் நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரித்திருக்கின்ற நிலையில் நுளம்பைக்கட்டுப்படுத்தும் வகையில் நுளம்புப் பொறி ஒன்றை மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டுபிடித்துள்ளார்.   


அவர் கண்டுபிடித்த இந்த நுளம்புப் பொறியையும் அதன் செயற்பாடுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அவர் இன்றைய தினம் வியாழக்கிழமை விளக்கமளித்தார்.



மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இது நடைபெற்றது. இதன் போது, மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, கணக்காளர் எஸ்.பிரேம்குமார், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், ஏ.சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.தயாபரன் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.



குறித்த நுளம்புப்பொறி சாதாரணமான வெற்று நீர் போத்தல்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் செலவு குறைந்ததும், வீடுகளில் பாவிக்கக் கூடியதுமாகும். இதன் மூலம் நுளம்பு பரவுவதைக்கட்டுப்படுத்த முடியும் என Nசுமசூரியம் திருமாறன் தெரிவித்தார்.



புனித மிக்கேல் கல்லூரியின் பழையமாணவரான சேமசூரியம் திருமாறன் குண்டசாலையில் விவசாய டிப்ளோமா பெற்றவராகும். 



இயற்றை முறையிலான ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை செயற்படுத்தி வரும் இவர் இது போன்ற பல்வேறு தொழில்நுட்ப ரீதியான உபகரணங்களை செய்து பயன்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |