Advertisement

Responsive Advertisement

என் கனவை திருடி விட்டார்கள்: நெய்மர் உருக்கம்! (படங்கள் இணைப்பு)

உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் களமிறங்க வேண்டும் என்ற தனது கனவு தகர்க்கப்பட்டு விட்டதாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார்.  காலிறுதி போட்டியில் கொலம்பியா- பிரேசிலில் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொலம்பிய வீரர் ஜுவான் ஜுனிகா தாக்கியதில் நெய்மருக்கு முதுகெலும்பு உடைந்தது.  உடனே அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதுமட்டுமல்லாது உலகக்கிண்ண தொடரில் இருந்தும் அவர் விலகினார். இதனால் அரையிறுதிக்கு சென்றுள்ள பிரேசில் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  கிண்ணத்தை வெல்ல இன்னும் இரு போட்டிகள் உள்ள நிலையில் நெய்மரின் வெளியேற்றம் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்நிலையில் நெய்மர் இந்த நிகழ்வு பற்றி கூறுகையில்இ இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்ற என் கனவை திருடிவிட்டார்கள். இருந்தாலும் என் உலகக்கிண்ண கனவை என் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி நிறைவேற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.  இது குறித்து பிரேசில் அணியின் டாக்டர் லுாயிஸ் ரன்கோ கூறுகையில்இ எஞ்சிய உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட முடியாது என்று நெய்மரிடம் சொன்ன போது கண்ணீர் விட்டு கதறினார்.  பின்னர் உங்களுக்கு 22 வயது தான் ஆகிறது. இன்னும் சாதிக்க அதிக கால அவகாசம் உள்ளது என்று கூறி தேற்றினேன் என்று கூறியுள்ளார்.  அதே போல் ஜுனிகா மீது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இது குறித்து 'பிபா' அதிகாரி டிலியா பிஷர் கூறுகையில்இநெய்மரை தாக்கிய சம்பவம் பற்றி ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்து வருகிறது.  தவறு உறுதி செய்யப்பட்டால்இ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீரர்கள் விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.










Post a Comment

0 Comments