முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்லும் ஆண்டு 9 மற்றும் 10 பயிலும் 14 மாணவர்கள் மாணவி ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதிக்கு சுற்றுலா சென்று அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளையும் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மாஸ்டர் தாண்டமடு நீர்நிலைக்கு அருகில் குறித்த மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது மட்டியெடுக்கவென இரு மாணவர்கள் நீரில் இறங்கியுள்ளபோது நீரிழ் மூழ்கி உயிரிழந்த முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம், கஜமுகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயிலும் செல்லத்தம்பி செல்வராணி மற்றும் தரம் 9பயிலும் சாந்தன் பிரவின்(14வயது)ஆகிய இருவரது சடலமும் முறக்கொட்டாஞ்சேனை பொது மயானத்தில் இன்று(07.07.2014)நல்லடக்கம் செய்யப்பட்டது இவ் இறுதி ஊர்வலத்தில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.



0 Comments