எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கடந்த 24 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த அரசியல் கூட்டம் ஒன்றில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து பகிரங்கமான அரசியல் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பகிரங்கமாக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments: