மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவின் மாங்காடு கிராமத்தில் இன்று பிற்பகல் பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். தனது வீட்டின் மலசலகூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.பாடசாலை சீருடையுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரணவிசாரணை அதிகாரி காராளசிங்கம் நீதவான் அனுமதியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்படி பொலிசாரைப்பணித்தார். ஊயிரிழந்தவரின் தந்தை வெளிநாட்டில் தொழில்புரிகின்றார்
0 Comments