Home » » நீரிழிவு நோயிலிருந்து தப்பிவிடலாம்.

நீரிழிவு நோயிலிருந்து தப்பிவிடலாம்.


நீரிழிவு நோயிலிருந்து தப்பிவிடுவதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம் என்ற நம்பிக்கை தருகிறார்கள் சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள். இன்றைய  உலகில் நீரிழிவு நோயினால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். சாதாரணமாக நீரிழிவுநோய் 30 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு வருவது  தான் வழக்கம். ஆனால் தற்போது 9-10வயது குழந்தைகள் கூட நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 

பெரும்பாலோனர் நீரிழிவுநோய் இருப்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் அப்படியே அறிந்தாலும் வறுமை காரணமாக சிகிச்சை எடுக்காமலே  உள்ளனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். நாள்பட்ட நீரிழிவு கண்கள், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய  உறுப்புகளை செயல் இழக்க செய்துவிடுகிறது. கண்களில் பார்வை இழப்பு, புண்கள் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும். 

முக்கியமாக கால்கள், கைகளில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறு புண்கள் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள  வேண்டும். தாமதமானால் புண்கள் அழுகும் நிலை ஏற்பட்டு அந்த உறுப்புகளை நீக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள்  வைத்துக்கொள்ள சிகிச்சை தரலாம். ஆனால் முற்றிலும் குணப்படுத்த முடியாது என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. 

நோயை தடுக்க வேண்டும் என்றால், நோய் ஏற்பட்டாலும் கூட உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எண்ணெய் ஆகாரங்கள், இனிப்புகள்,  கொழுப்பு சத்துகள் அடங்கிய நெய், பால் ஏடு போன்ற உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். பச்சைகீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள்,  நார்ச்சத்துள்ள உணவுகளையே உண்ண வேண்டும். பப்பாளி, நெல்லிக்காய், கொய்யாபழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, நாவற்பழம், போன்ற பழங்கள்  எடுத்துக்கொண்டால் நோய் கட்டுப்பாட்டுடன் இருக்கும். முக்கியமாக சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டும். ஆயுர் வேதத்தில் பாகற்காய்,  அகத்திக்கீரை போன்றவைகள் நோய் தன்மையை கட்டுப்படுத்தும்.   

நீரிழிவு நோய்க்கு மருந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தான். காலை மாலை சுமார் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி நோயை மருந்தில்லாமலேயே  கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று ஆயுர் வேத வைத்தியம் கூறுகிறது. வாய்க்கு ருசி என்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால்  ஆரோக்கியம் கெட்டு விடும். உடலையும் மனதையும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொண்டால் நோய் அறுக வாய்ப்பில்லை. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |