Advertisement

Responsive Advertisement

கிழக்கு முதலமைச்சர் பதவியைக் கோருகிறது முஸ்லிம் காங்கிரஸ்!

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் போட்டி நிலைமை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை தமக்கு வழங்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்புடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது. இதன் போது முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வதாக இரு தரப்பும் இணக்கம் கண்டிருந்தன.
தற்போது முதலமைச்சர் பதவியை வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சராக ஆளும் கட்சியின் அப்துல் மஜீட் கடமையாற்றி வருகின்றார். 2015ம் ஆண்டுடன் மஜிட்டிற்கு வழங்கப்பட்ட இரண்டரை வருட ஆட்சிக் காலம் நிறைவடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனவே தமது கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் கடுமையான முரண்பாட்டு நிலைமை நீடித்து வரும் நிலையில் முதலமைச்சர் பதவி விவகாரத்தில் எடுக்கும் தீர்மானம் இரு தரப்புக்கு இடையிலான உறவுகளை மேலும் விரிசலடையச் செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments