வதுபிட்டிவல வைத்தியசாலையில் வைத்தியசாக கடமையாற்றும் பெண் வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் வைத்தியர் செலுத்தி சென்ற கார் வெள்ளிக்கிழமை (18) மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கொங்கஸ்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகனவிபத்துக்கு காரணமானவர் என்று கைது செய்யப்பட்ட வைத்தியரை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தங்கல நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (19) உத்தரவிட்டார்.
தொடர்ந்து இவரை கைது செய்த பொலிஸார் நீதவான் முன்னிலையில் சனிக்கிமை (19) ஆஜர் படுத்திய போதே மேற்படி உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.
0 Comments