Home » » பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகு

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகு

மிளகை மருந்தாகப் பயன்படுத்தும் போது 500 மி.கி. முதல் 1000 மி.கி. வரை ஒரு வேளைக்குப் போதுமானதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேனில் குழைத்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ உள்ளுக்குக் குடிக்கலாம். மனிதர்க்கு வாதத்தால் வந்த நோய்கள் அத்தனையையும் போக்க வல்லது. 
மேலும் சீழ் வடியும் நிலையில் உள்ள மூல நோயினர்க்கு நன்மை தரக் கூடிய மருந்தாக மிளகு அமைவதாகத் தெரிகிறது. தீப்போலத் திரிந்து நன்மை தரக் கூடியதாக இருக்கும் மிளகை எவ்வகையிலேனும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வாத, பித்த, சிலேத்தும நோய்கள் அத்தனையும் மறைந்து போகும். 

மேலும் திமிர்வாதம், சுழலை, வாயு, சளித்தொல்லைகள் குணமாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும். மிளகைப் பொதுவாகப் பழுத்தபின் உலர்த்திப் பயன்படுத்துவது வழக்கம். மிளகு பழுப்பதற்கு முன் பச்சை மிளகு எனப்படும். பச்சை மிளகு வாத நோய்களையும் சீழ்வடியும் மூலத்தையும் குணப்படுத்தப் கூடியது. 
மிளகின் இலை கூட மருத்துவப்பயனுடையது. 


1. வீட்டில் எப்போதும் மிளகுத்ததூள் வைத்திருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும் வயிறு முட்ட சாப்பிட்ட போதும் வெருகடி அளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடிக்க உடன் சீரணமாகும். 

2. தும்மல், ஜலதோஷம் கண்டபோது 10 கிராம் மிளகுத் தூளோடு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து பாலில் இட்டு கொதிக்க வைத்துக் குடிக்க இரண்டொரு நாட்களில் தும்மலும், ஜலதோஷமும் காணாது போகும். 

3. மிளகை வறுக்காமல் அப்படியே பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்த நீர் கப சம்மந்தமான நோய்களைப் போக்கக் கூடியது. 

4. மிளகுத்தூளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வாய்கொப்புளிக்க தொண்டைக்கட்டு, பல்வலி குணமாகும். 
5. மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெருகடி அளவு சாப்பிட்டு வர ஈரல் நோய் (வைரல் ஹெப்பாடிடிஸ்) குணமாகும். 

6. மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன்வேர் 18 கிராம் எடுத்து அத்துடன் பனைவெல்லம் போதிய அளவு சேர்த்து அரைத்து தினை அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை ஒரு மாத்திரை என உண்ணுகையில் கொருக்கு நோய் என்னும் ஆண் குறியைச் சுற்றி வந்த பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும். 
7. மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்குத் தடவி சிறிதுநேரம் கழித்து குளித்துவிட பொடுகு குணமாகும். தலைமுடி நன்கு வளரும். 

8. இரண்டு வெற்றிலையோடு 7-8 மிளகு சேர்த்து உண்ண பூச்சுக்கடியினால் வந்த தோலைப் பாதிக்கும் நச்சு (டாக்ஸின்) வெளியேறும். 
9. மிளகுப்பொடியுடன் சம அளவு தூதுவளைப்பொடியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர அடுக்குத் தும்மல், பீனிசம் குணமாகும். ஈரல் பலப்படும். 

10. சிறிது பூவரச மரத்தின் கொழுந்திலையுடன் 5-6 மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கரைத்து தினம் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். 

11. சிறிது மிளகையும் கறிவேப்பிலையையும் தனித் தனியாக நெய்விட்டு வறுத்து எடுத்து சிறிது வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி அந்த நீரை சிறு குழந்தைகளுக்கு வரும் மாந்தத்துக்கு கொடுக்க மாந்தம் நீங்கி செரிமானம் உண்டாகும். 

12. முருங்கை இலைச்சாறு எடுத்து அத்துடன் மிளகுத்தூள் சேர்த்து குழைத்து நெற்றிப்பொட்டில் பற்றிட ஒற்றைத் தலைவலி (மைக்ரெய்ன்) குணமாகும். 

13. 5 மிளகுடன் 10 துளசி இலை சேர்த்து அரைத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து குடிக்க இருமல் குணமாகும். 

14. மிளகுத்தூளைத் தேனில் குழைத்து சாப்பிட சீதளத்தால் வந்த இருமலும் நெய்யில் குழைத்து சாப்பிட வரட்டு இருமலும் குணமாகும். 

15. அரைஸ்பூன் மிளகுத்தூளை சுடுநீரிலிட்டுப் போதிய பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட காய்ச்சல் தணியும். 17. 5-6 வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சல் தணியும். 

16. மிளகுத்தூளை நீரிலிட்டு அத்துடன் போதிய வெல்லமும் சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்க வயிற்றுவலி குணமாகும். 

17. மிளகுத்தூள் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும். அம்னீஷியா எனப்படும் வயது முதிர்வாலோ, தலையில் அடிபட்டதாலோ, மூளைக் கட்டியாலோ, மூளைத் திசுக்களின் அழிவாலோ, ஒற்றை தலைவலியாலோ வந்த ஞாபக மறதி குணமாகும். 

18. 50 கிராம் மிளகோடு 70 கிராம் சோம்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகியபதமாகக் கிண்டி வைத்துக் கொண்டு தினம் இருவேளை சுழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் முற்றிலும் மறையும். 

19. மிளகுத்தூளோடு போதிய அளவு உப்பு சேர்த்து பல்துலக்கிவர சிலநாட்களில் பல் சொத்தை, பல் வலி, வாய்துர்நாற்றம், பல் கூச்சம் ஆகியவற்றினின்று நிவாரணம் கிடைக்கும். 

20. ஆண் அல்லது பெண் மலடு என்று எதுவாக இருப்பினும் தினம் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கி சேர்த்து பாலோடு சேர்த்து குடித்து வருவதால் மலட்டுத் தன்மை நீங்கி பிள்ளைப்பேறு உண்டாகும். 

21. தலையில் மயிர்ப்புழுவெட்டு என்னும் நோயால் கொத்துக் கொத்தாக முடி கொட்டி அந்த இடங்களில் திட்டுத் திட்டாக வழுக்கைத் தலைபோல் தோற்றம் தரும். அப்போது மிளகுத்தூளோடு வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து அரைத்து வந்த விழுதை புழுவெட்டு வந்த இடத்தில் வைத்து சிறிது அழுத்தித் தேய்த்து வர விரைவில் துன்பம் தொலைந்து கருமையான முடி வளரும். 

22. ஒரு கைப்பிடி அருகம்புல்லோடு பத்து மிளகை வைத்து அரைத்து தீநீர் வைத்து குடித்து வர பல்வேறு விஷக் கடிகளும் விலகி ஓடும். 

23. மிளகையும் தும்பைப் பூவையும் சம அளவு எடுத்து அரைத்து மிளகளவு மாத்திரைகளாக்கி காய வைத்து எடுத்துக் கொண்டு 2-3 மாத்திரைகளை வாயிலிட்டு சிறிது வெந்நீர் அருந்த காய்ச்சல், முறைக் காய்ச்சல் விலகிவிடும். இப்படிப் பல்வேறு வகைகளில் பல்வேறு நோய்களுக்கு மிளகு மருந்தாவதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழலாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |