கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு நீதிமன்றினால் குற்றவாளிகளாக என இனங்காணப்பட்ட ஐவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற மனித கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு ஒன்பது பேர் மீது முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவர் விடுதலை பெற்றுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு நபர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
0 Comments