இலங்கையர்களின் பணங்களை சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு தமது நாடு உதவவில்லை என சீசெல்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களின் பணங்களை சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு சீசெல் நாடு உதவுவதாக வெளியான குற்றச்சாட்டை அந்நாட்டின் சீசெல்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன் போல் அடம் மறுத்துள்ளார்.
நாட்டின் தேசிய சபையில் எதிர்க்கட்சி தலைவர் டேவிட் பியர் தொடுத்த கேள்வி ஒன்றுக்கு இன்று பதிலளிக்கும் போதே அடம் இந்த மறுப்பை வெளியிட்டார்.
இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் அபிவிருத்திகளுக்கான நிதிகள் சீசெல்ஸின் ஊடாக சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
சுவிஸில் உள்ள சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளமை காரணமாகவே சீசெல்ஸை சில இலங்கையர்கள் பயன்படுத்துவதாக ஹர்சா தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு பிழையான எடுகோளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாக சீசெல்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உட்பட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் சீசெல்ஸில் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. எனவே அந்த நிறுவனங்களின் வைப்புக்கள் சுவிஸ் வங்கிகளில் இருக்கலாம் என அடம் குறிப்பிட்டார்
0 Comments