பத்து வயது பாடசாலை மாணவி ஒருவரை சக வகுப்பு மாணவர்கள் மூலம் தலையில் குட்டவைத்த சம்பவம் தொடர்பாக கைதான தியபெதும நாமல் ஓயா ஆரம்பப்பாடசாலை அதிபர் ஐயாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறையை சுத்தம் செய்யாததற்கு தண்டனையாக மாணவி வாந்தி எடுக்கும் வரை சக மாணவர்களைக் கொண்டு அதிபர் தலையில் குட்டவைத்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவ தினம் சிறுமி பாடசாலைக்கு தாமதமாக வந்ததால் வகுப்பை சுத்தம் செய்ய முடியாமல் போயுள்ளது.
|
அதிபரின் அழுத்தம் காரணமாக குறித்த மாணவியின் தலையில் சக மாணவர்கள் குட்டியுள்ளனர். இதனால் நோய்வாய்ப்பட்ட சிறுமி பகமூன ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான அதிபர் ஹிங்குரக்கொட நீதிமன்றத்தில் அஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
|
0 Comments