Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனையில் குப்பி விளக்கு வெடித்தமையால் வீடு சேதம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகர்புரம் 4ம் குறுக்கு வீதியில் வசிக்கும் சின்னத்துரை கோணேஸ்வரநிதி என்பவரின் தற்காலிக வீடு 11.07.2014ம் திகதி இரவு சுமார் 8.45 மணியளவில் மூன்றாம் தரம் படிக்கும் தனது மகன் படித்துக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த குப்பி விளக்கு வெடித்ததில் தற்காலிக வீடு  முற்றாக சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தார்.
மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு தனது குடும்ப வருமானத்தை கவனித்துக்கொண்டு வரும்  நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரைக்கு இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளும் இருக்கின்ற நிலையில் சம்பவத்தின்போது அனைவரும் எந்தவித சேதமின்றி காப்பாற்றப்பட்டனர்.

Post a Comment

0 Comments